கடல் மீன்கள்
(ராமேசுவரம் மீனவர்களின் வாழ்க்கைப் பதிவு)
"ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்"
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை...
நம்மில் பெரும்பாலோருக்கு ஓய்வு நாளாக மட்டுமே பழகிப்போன வாரத்தின் இறுதி நாள்,
இராமேசுவர மீன்பிடி கடற்கரைப் பகுதி ஒரு திருவிழா போல மனித கூட்டத்தை
நிறைத்துக்கொண்டு அந்த கடலோர உழைப்பாளர்களின் உழைப்பில் குதூகளித்துக்
கொண்டிருந்தது.
குவியல் குவியலாக,கூடை கூடையாக ,பெட்டி பெட்டியாக கடற்கரை ஓரமெங்கும் இறந்த மீன்களின் இறுதிஊர்வலம் மிக விமரிசையாக,மீனவர்களின் ஆதரவுடன் சந்தோசமாக நடந்து கொண்டிருந்தது.
இந்த இறந்து போன மீன்கள்தான் ,லட்சக்கணக்கான அந்த மீனவ மக்களின் உயிர் வளர்க்கும் ஆதாரமாக உள்ளது.
நம் உணவாக உருமாற்றம் அடைந்த இந்த இறந்த மீன்களுக்காக நாம் அதிகம் கவலைபடுவதில்லை , இருந்தாலும்
இந்த மீன்களை நம் உண்வாக மாற்றித்தர மீனவர்கள் மிகுந்த சிரமப்
படுகிறார்கள் கடலில் அவர்கள் படுகிற கஷ்டங்கள் நம்மில் பலருக்கு
தெரிவதில்லை
மீனவர்கள் எப்படி மீன் பிடிக்கிறார்கள்?,அவர்கள் படுகிற கஷ்டங்கள் என்ன?
இந்த பதிவில் அவைகளை பதிகிறேன்….
வாரத்தில் திங்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி உண்டு,மீனவர்கள்
மீன் பிடிக்க செல்லும் முன் மீன் வளத்துறையினரிடமிருந்து டோக்கன் என
அழைக்கப்படுகிற அனுமதிச்சீட்டை பெற வேண்டும் காலை ஆறு மணிக்கு டோக்கன்
விநியோகம் துவங்குகிறாது இந்த அனுமதிச்சீட்டு 24 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி தருகிறது, அதாவது இந்த அனுமதிச்சீட்டு 24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும், இந்த சீட்டு இன்றி மீன்பிடிப்பது குற்றமாகும்.மீன்பிடி தொழிலுக்கு டீசல் விசைப்படகுகள்(fishing boats) பயன்படுத்தப் படுகின்றன.
அனுமதிச்சீட்டினை பெற்ற பிறகு...
மீன்பிடி வலை,விசைப்படகை இயக்க தேவையான டீசல் அடங்கிய பேரல்கள்,பிடிக்கிற
மீன்களை கெட்டு போகமல் பராமரிக்க தேவையான ஐஸ்கட்டிகள் போன்ற பொருட்கள்டன்
தயாராக இருக்கிற விசைபடகுகள் மீனவர்களுடன் கடலலைகளைக் கிழித்துக் கொண்டு
கடலுக்குள் பாய்கிறது.
[காலை 6 மணிக்கு கடலுக்குள் சீறிப்பாய்கிற படகுகள் மறுநாள் காலையில் தான் கரைக்குத் திரும்புகிண்றன.]
கடலுக்குள் சென்றவுடன் மீனவர்கள் கரைக்கும் தங்களுக்குமான உறவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்குகிறார்கள்…ஆழ்கடல் பகுதிகளில் தொலை தொடர்புக்கு பயன்படுத்தப்படும் செல் பேசிகள் செயல் படுவதில்லை.கடலுக்குள் உயிரை பணயம் வைத்து செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உட்ப்பட்டு உயிரிலந்தலோ… படகில் ஏற்படும் ப்ரச்சனை அல்லது இயற்கை சீற்றங்களுக்கு இரையாகினாலோ...
அவர்களுக்கு உடனடியாக உதவ அங்கு யாரும் இல்லை.
கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கயிறு மூலம் வலையை கடலுக்குள் இறக்கிக் கொண்டே செல்கிறார்கள்,வலையை கடலுக்குள் விடும் போது படகின் வேகம் பாதுகாப்பு கருதி குறைக்கப்படுகிறது.
கடல் நீரின் ஆழத்தைப் பொறுத்து 60 முதல் 70 பாகம் [ஒரு பாகம் =ஐந்தரை அடி] வலையை கடலுக்குள் இறக்குகின்றனர்
இறக்கி விடப்பட்ட வலை இரண்டு முதல் மூன்று மணி நேரம் அப்படியே விடப்படுகிறது ,இந்த நேர இடைவெளியில் கடல் மீன்கள் வலைக்குள் சிக்கி கொள்கின்றன.
சில சமயங்களில் ஒரு படகின் வலை மற்ற படகுகளின் வலைகளுடன் சிக்கிக்கொள்ளும்.அப்படி வலைகள் சிக்கி கொள்ள நேரிட்டால் மீன்கள் வலைகளில் சிக்காது,எனவே ஒரு படகுக்கும் இன்னொரு படகுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி விட்டு மீன்பிடிக்கிறார்கள்
பின்பு கடலுக்குள் வீசியெறியப்பட்ட மீன்பிடி வலைமீனவர்களின் பெரும் முயற்சியால் மேலே இழுக்கப்படுகிறது.
வலையை மேலே இழுக்க கயிறு மற்றும் வின்ச் (winch) எனப்படும் கயிறு சுழற்றும் கருவியும் பயன் படுத்தப்படுகிறது, வின்ச்சை சுழற்றி வலையை மேலே இழுக்கிறார்கள்
வின்ச்
வலையை படகின் உள்ளே இழுத்த பின்பு வலையில் சிக்கி இருக்கிற மீன்கள் வகை வாரியாக தரம் பிரிக்கப் படுகிறது(வலையில் மீன்கள் மட்டுமல்லாமல்,கடற்சிப்பிகள்,சங்குகள் போன்றவைகளும் சிக்குகின்றன அவைகளும் பிரித்து வைக்க படுகின்றன)
வலையை கடலுக்குள் வீசுதல்,வீசிய வலையை மேலே எடுத்தல்,வலையில் சிக்கிய மீன்களை பிரித்து பெட்டிக்குள் அடைத்தல் ஆகிய இந்த செயல் முறை "பாடு" என அழைக்கப்படுகிறது.
சராசரியாக ஒரு நாளில் 8 முதல் 10 "பாடு" வரை மீன் பிடிக்கிறார்கள்.
மீனவர்கள் தங்களுக்கான காலை சாப்பாட்டை கடலுக்குள் கிளம்புவதர்க்கு முன்னரே வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகிறார்கள், விசைப் ப்டகுகளில் சமையலரை தனையாக உள்ளது, இன்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடு சமைக்கப்படுகிறது (வறுத்த மீனுடன்...)மீனவர்களுக்கு தேவையான டீ, காபி போன்ற தேவைகளையும் இந்த சமையலறை நிறைவு செய்கிறது.
மீனவர்கள் பொழுதுபோக்கிற்காக ரேடியோ எடுத்து செல்வதுண்டு. தற்போதைய கால கட்டத்தில் செல் பேசியிலேயே பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதால் ரேடியோக்கள் காலாவதியாகி விட்டன
இரவு நேரங்களில் கூட "பாடு" நடந்து கொண்டு தான் இருக்கும்.இரவுகளில் பாட்டரி விளக்குகள் விசைப் படகுகளை ஒளியூட்டுகின்றன..
கடல் நாள் என்று அழைக்கப்படும் மீன்பிடி நடைபெறும் நாட்களில் எல்லாம் நட்சத்திரங்களுக்கு போட்டியாக மீன் பிடி படகுகள் கடலுக்குள் ஒளி வீசிக்கொண்டிருக்கும்…
காலையில் மீன்பிடி பணிக்கு செல்கிற மீனவர்கள்…
வெயில், மழை,காற்று என் எந்த பிரச்சனையையும் பொருட்படுத்தாமல் நாளின் 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்…
கடல் நாட்களின் போது அவர்களின் கண்கள் தூக்கதை இழந்து விடுகிறது, அவர்களது உடல் ஓய்வை மறந்து விடுகிறது.
பல சமயங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தாக காரணம் சாட்டப்பட்டு இலங்கை கடல் பாதுகாப்புப் படை வீரர்களால் (வீரர்?) சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தவுடன்(மீன் பிடித்து முடித்தவுடன் இல்லை?) விசைப்படகுகள் கரையை நோக்கி த் திரும்புகின்றன
மீனவர்கள் பாடுபட்டு ப்டித்த மீன்கள் மீன்பிடி விசை படகின் உரிமையாளருக்குத்தான் சொந்தம்…
மீன்கள்
கடற்கரைக்கு அருகாமையில் உள்ள விசைப்படகின் உரிமையாளருக்கு சொந்தமான மீன்
கம்பேனி என அழைக்கப்படுகிற இடங்களில் எடை போடப்பட்டு விநியோகஸ்தர்களுக்கும்,மீன் வியாபாரிகளுக்கும் எடைபோடப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.
கரைக்குத்திரும்பிய
மீனவர்கள் மீன்களை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் கூலிகளை ப்
பெற்றுக்கொண்டு வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்…
அடுத்த நாள் மீண்டும் மீன்பிடிக்க தயாராவதற்க்காக…