Monday, May 7, 2012

புற்று நோய்க்கான அறிகுறிகள்
[ திங்கட்கிழமை, 07 மே 2012, 02:07.29 பி.ப GMT ]
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.புகைப்பழக்கம், சில உணவு பழக்க வழக்கங்கள், சூரியனிலிருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பித்தளங்கள் போன்றவற்றிற்கு உட்படும் போது மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது.
இதனால் செல்கள் அதீத வளர்ச்சி அடைந்து புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்:
1. புகையிலை பயன்படுத்தக்கூடாது.
2. கொழுப்பான உணவை குறைத்து அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகள் உட்கொள்ளலாம்.
3. முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை:
1. புற்று நோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்.
2. புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ளமச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
3. கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
4. தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
5. விவரிக்க முடியாத விதத்தில் உடல் எடையில் மாற்றம்.
6. இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு.
7. பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பலி.
புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது எப்படி:
அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை(ரேடியேஷன்தெரபி), வேதி மருத்துவம்(கீமோதெரபி), ஹோர்மோன் மருத்துவம் போன்றவை புற்று நோய் சிகிச்சைகளில் அடங்கும்.
புற்று நோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளை பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

No comments:

Post a Comment