Wednesday, May 9, 2012

நேற்று இங்கிலாந்து சவுத் ஹேர்ரோ வில் அப்பிள் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த இலங்கை மாணவர் இவர்தான்.

இங்கிலாந்தில் கல்வி பயிலும் மட்டக்களப்பு கல்லடி, வேலூரைச் சேர்ந்த 27 வயதுடைய மரியதாஸ் முரளி என்ற மாணவன் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகாமையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுத் ஹேர்ரோ என்ற இடத்தில் உள்ள அப்பிள் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொலிசார் இலங்கையிலுள்ள அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
மேற்படி மரணமடைந்த முரளி என்பவர் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment