Monday, May 7, 2012

மாந்திரீகத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் பரிசு: சவால் விடுக்கும் பிரிட்டன் நிர்வாகி
[ செவ்வாய்க்கிழமை, 08 மே 2012, 02:53.25 மு.ப GMT ]
மாந்திரீகம் உள்ளிட்டவைகளால் நோயை குணப்படுத்துவதாகக் கூறும் மந்திரவாதிகள், அறிவியல் பூர்வமாக இதை நிரூபித்தால் 85 லட்ச ரூபாய் தருவதாக பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.பிரிட்டனில் உள்ள ஆசிய பகுத்தறிவு அமைப்பின் நிர்வாகி சச்தேவ் விர்தி. இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவைச் சேர்ந்தவர்களும், ஆப்ரிக்கா மற்றும் கரீபிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வருகை புரிகின்றனர்.
இங்கு வந்தவுடன், அந்த நோயை குணப்படுத்துகிறேன், இந்த நோயை குணப்படுத்துகிறேன், உங்கள் கவலையையெல்லாம் போக்குகிறேன் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றனர்.
இவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி, ஏராளமாக சம்பாதிக்கின்றனர். ஆவி மற்றும் மாந்திரீகங்கள் மூலம் சிகிச்சை அளிப்பதாகக் கூறும் நபர்கள், இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அந்த நபர்களுக்கு 80 லட்ச ரூபாய் பரிசு அளிக்கத் தயாராக இருக்கிறோம்.
சம்பந்தப்பட்ட மந்திரவாதிகள் எங்களை அணுகி, தங்கள் வித்தையைக் காட்டி இந்த பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment