Saturday, May 5, 2012

ஏகத்துவத்தை உள்ளத்தில் அதிகரிக்கச் செய்யும் காரியங்களில் சில

Posted by: Webmaster on Sunday, April 8th, 2012
K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
இறைவனை நம்பி வாழ்பவரே! ஏகத்துவத்தை உள்ளத்தில் வளர்த்துக் கொள்ளும் காரணங்களை கடைப்பிடி!
ஏகத்துவம் என்பது ஒரு மரம் போன்றதாகும் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்படும் போது வளர்ந்து அலங்காரமாகி பலன் தருவது போல் அல்லாஹ்வை நெருங்குவதற்கான செயல் களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் அன்பு, அவனை அஞ்சுவது, அவனிடமே ஆதரவு வைப்பது அதிகமாகிவிடும், அவனையே சார்ந்து வாழ்வது அதிக பலமாகும்.
ஏகத்துவத்தை அதிகரிக்கச் செய்யும் காரியங்களில் சில:
1. அல்லாஹ்விடத்திலுள்ளதைப் பெறும் ஆவலில் அவனுக்குக் கட்டுப்படுவது
2. அல்லாஹ்-வின் தண்டனையை பயந்து பாவங்களை விடுவது
3. வானங்கள், பூமியில் உள்ள ஆட்சியை சிந்தித்தல்
4. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளையும் அவைகள் மூலம் வெளிப்படக் டியவற்றையும் அறிய வேண்டும், அத்துடன் அல்லாஹ்வின் கண்ணியம் ஆற்றலின் மீது அவைகள் அறிவிப்பதையும் அறிய வேண்டும்
5. பயனுள்ள கல்வியையும் அதற்கேற்ப செயல்படுவதையும் கட்டிச் சாதமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
6. குர்ஆனை சிந்தித்தனையுடனும் அதன் பொருளை விளங்கியும் ஓதி வர வேண்டும்.
7. கடமையான தொழுகைக்குப் பின்னர் நபில்-உபரியான வணக்கங்களைக் கொண்டு அல்லாஹ்-வின் நெருக்கத்தைப் பெறவேண்டும்.
8. நாவாலும் உள்ளத்தாலும் தொடராக அல்லாஹ்-வை திக்ர்செய்ய- நினைக்க வேண்டும்
9. விருப்பமான பலர், பல இருக்கும் போது அல்லாஹ்விற்கு யார் பிரியமானவரோ அவரை, எது அல்லாஹ்வுக்குப் பிரியமானதோ அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
10. வெளிப்படையான, மறைமுகமான அல்லாஹ்வின் அருட் கொடைகளில் சிந்தனையை செலுத்த வேண்டும், அடியார்கள் மீது அவன் செய்திருக்கும் பேரருள்கள், உபகாரங்களின் பால் பார்வையை செலுத்த வேண்டும்.
11. அல்லாஹ்-வின் முன் நிற்கும்போதும் அவனிடம் தேவைப்படும் போதும் பயம், பணிவோடு நிற்க வேண்டும்.
12. அல்லாஹ் இறங்கி வரும் நேரமாகிய இரவின் மூன்றில் ஒரு பகுதியில் அல்லாஹ்வுடன் தனித்து இருக்க வேண்டும், அந்த நேரத்தில் குர்ஆன் ஓத வேண்டும், பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீள வேண்டும்.
13. அல்லாஹ்வுக்காக நேசம் கொள்பவர்கள், உளத்தூய்மை. சிறப்பு உடையவர்களுடன் அமரவேண்டும், அவர்களின் பேச்சுகள், குண நலன்களிளிருந்து பயன் பெறவேண்டும்.
14. அல்லாஹ்வுக்கும் உள்ளத்திற்கும் இடையே திரையை ஏற்படுத்தும் காரியங்களை விட்டும் தூரமாக வேண்டும்.
15. அவசியமற்ற பேச்சு, முறையற்ற உணவு, தவறான கலந்துரையாடல், தவறான பார்வை ஆகியவற்றை விட்டு விடவேண்டும்.
16. தனக்கு விருப்பமானதையே தனது முஃமினான சகோதரனுக்கு விரும்ப வேண்டும், அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
17. முஃமின்களுக்கு மோசடி செய்வதை விட்டும் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும், சதி, பொறாமை, பெருமை, ஏமாற்றுவது, தற்பெருமை ஆகியவற்றை விட்டும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
18. அல்லாஹ்-வின் திட்டத்தை முழு மனதுடன் ஏற்க வேண்டும்.
19. அல்லாஹ்-வின் அருட்களுக்கு நன்றி செலுத்தியும் சோதனைகளில் பொறுத்தும் கொள்ளவும் வேண்டும்.
20 பாவங்களைச் செய்யும்போது அவற்றிலிருந்து அல்லாஹ்-வின் பக்கம் மீளவேண்டும்.
21. உபகாரம், நற்குணம், சொந்தபந்தங்களை அரவனைத்தல் இன்னும் இதுபோன்ற நல்ல காரியங்களை அதிகமாகச் செய்து வரவேண்டும்.
22. சிறிய, பெரிய எல்லாக் காரியங்களிலும் நபி (ஸல்) அவர்களை பின் பற்றி வரவேண்டும்.
23. அல்லாஹ்வுடைய பாதையில் போராடி வரவேண்டும்.
24. தூய உணவை உட்கொள்ள வேண்டும்.
25. நன்மையை ஏவி தீமையை தடுத்து வரவேண்டும்.

No comments:

Post a Comment