Thursday, May 10, 2012

சுட்டெரிக்கும் வெயில் சுடாமல் இருக்க...
Abu Maryam
1.தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்,வெயிலில் செல்லும்போது கையில் ஒரு தண்ணீர் புட்டி(Water bottle) எடுத்து செல்வது நல்லது.தாகமாக,வறட்சியாக உணர்கிற சமயங்களில் எல்லாம் தயங்காமல் தண்ணீர் குடித்து விடுங்கள்.
2.தினசரி குளியல் அவசியம்.
3.குழந்தைகள் வெயிலில் விளையாட அனுமதிக்க கூடாது.விளையாட தோதான நேரம் காலை 6 முதல் 8 மற்றும் மாலை 4 முதல் 6.
4.கார்பன் வாயு அடைக்கப்பட்ட குளிர்பானங்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.பழச்சாறுகள்,இளநீர்,நீராகாரம்,மோர்,பால் போன்ற இயற்கை பானங்களை பருகுவது நலம்.
5.ஈ மொய்க்கும் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.(இது வெயில் காலம் மட்டுமல்ல எக்காலமும் பொருந்தும் அறிவுரை).
6.இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
7.வெயிலின் சூட்டை தணிக்கிறேன் பேர்வழி என்று குளிர்பானங்கள்,ஐஸ் க்ரீம்கள் அதிகம் சாப்பிடுவது உடற்சூட்டை அதிகரிக்கும்.
8.காபி (caffine உடைய பானங்கள்) அதிகம் சாப்பிடுவது உடற்சூட்டை அதிகரிக்கும்.
9.இயற்கை கோடையின் கொடையாக அளித்துள்ள வெள்ளரி,தர்பூசணி,நுங்கு போன்ற கோடைக்கு இதமளிக்கும் விஷயங்களை அதிகம் சாப்பிடலாம்
10.முடிந்த வரை வெயிலில் அலைவதை தவிர்த்து விடுங்கள்.வெயிலில் அதிகம் அலைபவர்கள் குளுக்கோஸ் கலந்த நீரை எடுத்து செல்வது நல்லது.

No comments:

Post a Comment