Saturday, May 5, 2012

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்-2

Posted by: Webmaster on Sunday, April 8th, 2012
K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

எனது சகோதரா! பள்ளியில் பேண வேண்டிய அதிகமான ஒழுக்கங்கள் உள்ளன அவற்றில்சில:
7. பள்ளிக்குச் செல்பவர் ஓத வேண்டிய துஆ:

…..اَللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ يَسَارِي نُورًا وَفَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا وَأَمَامِي نُورًا وَخَلْفِي نُورًا وَاجْعَلْ لِي نُورًا….بخاري.

……..இறைவா! எனது உள்ளத்திலும், எனது பார்வையிலும், எனது செவியிலும், எனது வலது, இடது புறத்திலும். எனது மேலும், கீழும், எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி6316.
8. பள்ளிக்குள் நுழைபவர் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளியேறும்போது இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் விரும்பத்தக்கதாகும்.
:நீ பள்ளிக்குள் நுழைவதாக இருந்தால் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளி யேறுவதாக இருந்தால் இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் சுன்னத்தைச் சார்ந்ததாகும் என அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள், நூல்: ஹாகிம் 791

9. உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைவதாக இருந்தால் அல்லாஹ்வுடைய தூதரின் மீது சலாம் கூறி, பின்னர்

اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ

(இறைவா! உனது அருள் வாயல்களை திறந்தருள்வாயாக!) என்றும், உங்களில் ஒருவர் பள்ளியிலிருந்து வெளியேறுவதாக இருந்தால்

اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

(இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்) என் றும், கூற வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உசைத் (ரலி) கூறினார், நூல்கள்:அபூதாவூத்465, முஸ்லிம் 1685.
10. பள்ளிக்குள் நுழையும் முன்னர் அழுக்கு படிந்த செருப்புகளை அச்செருப்பில் படிந்திருக் கும் அழுக்கை நீக்குவதற்காக அதை மண்ணில் தடவிக் கொள்ள வேண்டும். (இது அந்தக் காலத்தில் மணல் பள்ளிகளாக இருந்ததால் இப்படிச் செய்ய வேண்டும் இப்போதுள்ள பள்ளிகளுக்கு இது பொருந்தாது.)
11. பள்ளிக்குச் செல்பவர் தனது உடலையும் ஆடைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
: ஆதமுடைய மக்களே! மஸ்ஜிதிலும் தொழுகைகளில் உங்களை ஆடைகளால் அழகாகிக் கொள்ளுங்கள்…………7:31. :உங்களில் ஒருவர் ஜூம்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி

1 comment: