Friday, May 4, 2012


முஹம்மட் அர்ஷாத்
arshathslm@gmail.com
இலங்கையின் கிழக்கு மாகாணம்-கல்முனை கடற்கரையில் அமைந்துள்ள தர்ஹாவிலும், இந்துக்களின் கோயில்களிலும் உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள் இன்னும் ஒரு சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளன.
கல்முனை கடற்கரை தர்ஹாவுக்கு ஏன் செல்ல கூடாது.
கல்முனை கடற்கரை தர்ஹாவில் அழ்ழாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டிய வணக்கங்கள், நேர்ச்சை, பிரார்த்தனை செய்தல், அறுத்துப்பலியிடுதல், உதவிதேடுதல், நோய் நிவாரணம் தேடுதல் போன்றவைகள் அழ்ழாஹ் அல்லாத இறந்து மண்ணோடு மண்ணாகிப் போனவர்களிடம் செய்யப்படுகின்றன. இது முழுக்க முழுக்க குறைசிக் காபிர்களின் கொள்கைகளை ஒத்ததாகும்.
இஸ்லாத்தில் பிரார்த்தனையின் போதோ, ஸியாரத்தின் போதோ ஊதுபத்தி,  பழம், தேங்காய், சர்க்கரை, பூ, படையல்களுக்கு எந்த வேலைகளும் கிடையாது. இந்துக்களின் மத அனுஸ்டானங்களின் போதுதான் இவைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவர்கள் இந்துக்களா? முஸ்லிம்களா? என நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.
normal_pregnant_silhouette_low_res
நபிமார்களின் கப்ர்களை கூட வணக்கஸ்தலங்களாக ஆக்க முடியாது:
“தங்கள் நபிமார்களின் அடக்கஸ்த்தலங்களை வணக்கஸ்த்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறிஸ்த்தவர்களையும் அழ்ழாஹ் சபிக்கிறான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரிரி 436, 437)
நபிமார்களின் கப்ர்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களையே அழ்ழாஹ் சபிக்கின்றான் என்றால் முகவரியற்ற இவ் அவ்லியாக்கள் எம்மாத்திரம்? எனவே, சபிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுகின்ற இடத்திற்கு ஒரு இறைவிசுவாசி செல்லமாட்டான்.
normal_pregnant_silhouette_low_res
படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்று கூடும் தளமே தர்ஹா
“அறிந்து கொள்ளுங்கள்! மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்’ என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ (அறிவிப்பவர் : அபூ உபைதா (ரலி), நூல் : அஹ்மத் -16781)
நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்களே படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என்றால் முகவரியற்ற அவ்லியாக்களுக்குப் பின்னால் செல்பவர்கள்?
தரைமட்டமாக்க வேண்டிய தர்ஹாக்கள்
‘அலி (ரலி) அவர்கள் என்னிடம் அழ்ழாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன்.எந்த சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனை தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் அல் அஸதி, நூல்: முஸ்லிம்-1609)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.’ (அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி), நூல்: அஹ்மத் -22834)
normal_pregnant_silhouette_low_res
பிரார்த்தனை தான் வணக்கம்
‘பிரார்த்தனை தான் வணக்கமாகும்’ என்று அழ்ழாஹ்வின் தூதர்  (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), நூற்கள்: அஹ்மத், திர்மீதி, அபூதாவூத்)
இவ்வாறு அழ்ழாஹ்வின் தூதர்  (ஸல்)  அவர்கள் கூறியிருக்க ‘பிரார்த்தனை’ என்கின்ற வணக்கம் கல்முனை தர்ஹாவில் அழ்ழாஹ் அல்லாதோரிடம் நிறைவேற்றப்படுகின்றது. அழ்ழாஹ்வை மட்டும் வணங்கும் முஸ்லிம், அழ்ழாஹ்வின் வசனம் கேலிசெய்யப்படும் இந்த தர்ஹாக்களுக்கு செல்லமாட்டான்
பதில்தரமுடியாத தர்ஹா அவ்லியா
‘அழ்ழாஹ்வை அன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப்பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்.’ (அல்குர்ஆன் 7:194)
தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது
“அழ்ழாஹ்வின் தூதர்   (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)
normal_pregnant_silhouette_low_res
செவியேற்காத தர்ஹா அவ்லியா
“அவனே அழ்ழாஹ் உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனை போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.  (அல்குர்ஆன் 35:13,14)
தீங்கை தடுக்க முடியாத தர்ஹா அவ்லியா
‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அழ்ழாஹ்’ என்று கூறுவார்கள். ‘அழ்ழாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்.’ என்று கேட்பீராக! ‘அழ்ழாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அழ்ழாஹ் எனக்குப் போதுமானவன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்.’ என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 39:38)
அவகாசம் தேவையற்ற அழ்ழாஹ்
“அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ‘நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள்–(இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று. (அல்குர்ஆன் 7:195)
normal_pregnant_silhouette_low_res
தமக்கு தாமே உதவி செய்ய முடியாத அவ்லியாக்கள்
“அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.” (அல்குர்ஆன் 7:192)
பதில்தர முடியாத அவ்லியாக்கள்
‘நிச்சயமாக அழ்ழாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!’ (அல்குர்ஆன் 7:194)
அழ்ழாஹ்வால் படைக்கப்பட்ட அவ்லியாக்கள்
‘எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அழ்ழாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அழ்ழாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!’ (அல்குர்ஆன் 7:191)
முயற்சி வீணாக்கப்பட்ட அவ்லியா பக்தர்கள்
“என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம். ’செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.” (அல்குர்ஆன் 18:102-104)
normal_pregnant_silhouette_low_res
அவ்லியாக்களை வணங்கவில்லை என்று கூறும் பொய்யர்கள்
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அழ்ழாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அழ்ழாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அழ்ழாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அழ்ழாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:03)
நன்மை, தீமை செய்ய முடியாத தர்ஹா அவ்லியாக்கள்
‘அழ்ழாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அழ்ழாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும் பூமியிலும் அழ்ழாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 10:18)
வணக்கஸ்த்தலமாக்கப்படாத அடக்கஸ்த்தலம்
‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று  அழ்ழாஹ்வின் தூதர்   (ஸல்) அவர்கள்  பிரார்த்தனை செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் அவர்களது கப்ர் பாதுகாக்கப்படுகின்றது. இல்லையென்றிருந்தால் நமது தர்ஹா பக்தர்கள் அன்னாரது கப்ரடியிலும் 12 நாட்கள் மௌலீது வைபவம் நடாத்தி ஊதுபத்தி,  பழம், தேங்காய் சகிதம் அபிசேகம் செய்திருப்பார்கள். அழ்ழாஹ் காப்பாற்றிவிட்டான்.
ஈ பறித்ததை மீட்க முடியாத தர்ஹா அவ்லியா
‘மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அழ்ழாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.’ (அல்குர்ஆன் 22:73)
பரிந்துரை செய்யமுடியாத தர்ஹா அவ்லியாக்கள்
‘அழ்ழாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா? என்று கேட்பீராக! ‘பரிந்துரைகள் அனைத்தும் அழ்ழாஹ்வுக்கே’ என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்’ (அல்குர்ஆன் 39:43-44)
மரணித்துவிட்ட படைப்பினமே தர்ஹா அவ்லியாக்கள்
‘அழ்ழாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். ‘எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள்.’ (அல்குர்ஆன் 16:20-22)
normal_pregnant_silhouette_low_res
தர்ஹா அவ்லியாக்களும் அழ்ழாஹ்வின் அடிமைகளே!
‘அழ்ழாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 07:194)
அவ்லியாக்களைப் பிராத்திக்காதீர்!
‘அழ்ழாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! (அல்குர்ஆன் 10:106)
உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்
‘அழ்ழாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (முஹம்மதே!) கேட்பீராக! (அல்குர்ஆன் 46:04)
கியாமத் நாள் வரை பதிலளிக்காத தர்ஹா அவ்லியாக்கள்
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அழ்ழாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். (அல்குர்ஆன் 46:05)
normal_pregnant_silhouette_low_res
நரகத்தை தங்குமிடாக பெறும் தர்ஹா வழிபாட்டாளர்கள்
என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன் 18:102)
சுருக்கமாக சொல்லப் போனால் இந்துக்கள் சிலையை நிறுத்தி வைத்து வணங்க, இவர்கள் சமாதியை படுக்க வைத்து வணங்குகின்றார்கள்.
அங்கே சிலைக்கு பட்டுத்துணி போர்த்த, இவர்கள் இங்கு சமாதிக்கு பட்டுத்துணி போர்த்துகின்றார்கள்.
அங்கே பூமாலை, ஊதுபத்தி ஆராதனை நடக்க, இங்கும் பூமாலை, ஊதுபத்தி ஆராதனை நடக்கின்றது.
அங்கேயும் குத்து விளக்கில் எண்ணெய் வைக்கப்பட்டுள்ளது. இங்கேயும் எண்ணெய் வைக்கப்பட்டுள்ளது.
அங்கே சிலைக்கு முன்  செய்யப்படுகின்ற சாஷ்டாங்கம், அபிஷேகம் இங்கே கப்ருக்கு முன் செய்யப்படுகின்றது.
அங்கே பக்திப் பாடல்கள், இங்கே மவ்லீதுப் பாடல்கள்,
அங்கே கோயில் தொட்டிலில் குழந்தை, இங்கே அவ்லியா கப்ரின்மீது குழந்தை
எனவே, இவர்கள் இந்துக்களா? முஸ்லிம்களா?
இதோ அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் இறுதி எச்சரிக்கைகள்
‘தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அழ்ழாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள(பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.’ (அல்குர்ஆன் 4:48  )
’அழ்ழாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அழ்ழாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர் களும் இல்லை.’ (அல்குர்ஆன் 5:72 )
‘நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்.’ (அல்குர்ஆன் 39:65)
‘யார் அழ்ழாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனைச் சந்திக்கிராறோ, அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராகச் சந்திக்கின்றாரோ அவர் நரகம் புகுவார். என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (ஆதாரம்: புஹாரி-1238)

No comments:

Post a Comment