கெயில் ரன் மழை. மூழ்கியது மும்பை இந்தியன்ஸ். 4-ம் இடத்துக்கு முன்னேறிய பெங்களூரு.
Posted on : Thu 10-05-2012 12:05:40 PM
ஐபிஎல் சீசன் 5-ன் 54வது லீக் ஆட்டத்தில், 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூர் அணி, 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, இலக்கை எட்டியது.
கிறிஸ் கெயில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 59 பந்துகளில் 82 ரன்கள் விளாசி, கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. கோலி ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். தில்ஷன் 19 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக, மும்பை தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 44 ரன்களையும், சச்சின் 24 ரன்களையும், ராயிடு 22 ரன்களையும் எடுத்தனர். பொலார்டு 21 ரன்களையும், ஹர்பஜன் 20 ரன்களையும் சேர்த்தனர்.
பெங்களூர் தரப்பில் வினய் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியில், பெங்களூரின் கிறிஸ் கெயில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் புள்ளிப் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மும்பை மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.
No comments:
Post a Comment